வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள புதுவிளாங்குடி பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரிமளா என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து சுப்ரமணியன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.