மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஞ்சிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். இவர்கள் ஜெயம்கொண்டம்-விருத்தாசலம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது கரும்பு லோடு ஏற்றி சென்ற டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி ரஞ்சிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரஞ்சிதாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.