Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வெளியே சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சாலாமேடு மின்வாரிய குடியிருப்பு பகுதியில்  நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழியராக  பணியாற்றி வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் நட்ராஜன் வேலைக்கு சென்றுள்ளார். அதன்பிறகு சத்யா ஏழுசெம்பொன் கிராமத்தில் இருக்கும் தங்களது விவசாய நிலத்தை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து இரவு நேரத்தில் தம்பதிகள் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது பின்பக்க கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த நட்ராஜன்  வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 13 பவுன் தங்க நகை மற்றும் 3 லட்சத்து 12,000 ரூபாய் பணத்தை மர்மநபர்கள்  கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து நட்ராஜன் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |