Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற தம்பதியினர் ….மர்ம நபர்கள் செய்த வேலை …. போலீஸ் வலைவீச்சு ….!!

மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறித்து சென்ற  மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பாவூர் கிராமத்தில் ஏகாம்பரம்-சத்யா  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வந்தவாசி- காஞ்சிபுரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தம்பதியினரை பின் தொடர்ந்து   மோட்டார் சைக்கிளில் வந்த   மர்ம நபர்கள்   திடீரென சத்யாவின் கழுத்தில் இருந்த 4 1/2 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.

இதுக்குறித்து   சத்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நகையை பறித்து  சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |