வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள விளாங்குடி கிராமத்தில் பெயிண்டரான ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்பிகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற தம்பதியினர் திரும்பி வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகைகள், 80 ஆயிரம் ரூபாய் பணம், 2 செல்போன்கள் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ராஜா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.