மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொட்டம்பாளையம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் தனது நண்பரான மெர்லின் என்பவருடன் அன்னூருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார். இதனையடுத்து தொப்பம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே தனியார் நிறுவனத்திற்கு ஆட்களை ஏற்றிச் சென்ற பேருந்து இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கார்த்திகேயன் மற்றும் மேர்லின் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று வாலிபர்களின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.