வாலிபர்களிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூரில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான பாரதி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் உலகம்மன் கோவில் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராம் சூர்யா என்பவர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து பாஸ்கர் மற்றும் பாரதியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாஸ்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராம் சூர்யாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.