Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற மனைவி-மகள்…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சிக்கிய உருக்கமான கடிதம்…!!

முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள காட்டூர் பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பழனிசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அதற்கான மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளார். இதனை அடுத்து மனைவி மற்றும் மகள்கள் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது பழனிச்சாமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த பழனிசாமியின் மனைவியும், மகளும் அவர் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனிசாமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் காவல்துறையினர் பழனிசாமி எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் உடல் உபாதை காரணமாக நான் தற்கொலை செய்து கொள்கிறேன்; எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என அவர் எழுதியுள்ளார். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |