முதியவரிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள காதக்கிணறு சாஸ்திரி நகரில் முருகையா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் நரசிங்கம்-கடச்சநேந்தல் சாலையில் சென்று கொண்டிருந்த போது மற்றொரு மோட்டார் சைக்கிள் முருகையாவின் மோட்டார் சைக்கிளை முந்துவது போல சென்றுள்ளது.
இதனை அடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் முருகையா கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து வேகமாக தப்பி சென்றார். இதுகுறித்து முருகையா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.