Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற வாலிபர்….. கோர விபத்தில் பறிபோன உயிர்….. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முத்தனூர் பகுதியில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான சக்தி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சொந்த வேலை காரணமாக சக்தி மோட்டார் சைக்கிளில் வெளியேற்றப்பட்டுள்ளார். இவர் சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன வடக்கம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் சக்தியின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சக்தி இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்தியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |