சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரமங்கலம் வடக்கு தெருவில் கூலித்தொழிலாளியான கலியன்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அதனை வெளியே கூறினால் கொன்று விடுவதாகவும் கலியன் சிறுமியை மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் கலியனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.