Categories
தேசிய செய்திகள்

“வெளியே சொன்னால் கொலை பண்ணிடுவேன்”…. தங்கையை மிரட்டி…. அண்ணன் செய்த காரியம்… கொடூரம்..!!

கர்நாடக மாநிலத்தில் கூட்டு குடும்பத்தில் வசித்து வந்த தங்கையை அண்ணனே பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாட மாநிலத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒரு கூட்டுக் குடும்பத்தில் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களாக உடல் நிலை மாறுதல் அடைந்தது. அவருக்கு வாந்தி மற்றும் மயக்கம் இருப்பதை கவனித்த பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து மருத்துவர்கள் பரிசோதனை செய்து சிறுமி கர்ப்பமாக உள்ளதாக கூறினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர்கள் அவரிடம் கேட்டுள்ளனர். அப்போது குடும்பத்தில் வசித்து வந்த சிறுமியை 17 வயது அண்ணன் அதாவது பெரியப்பா மகன் பல முறை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

Categories

Tech |