Categories
சினிமா தமிழ் சினிமா

வெளியே தலை காட்ட முடியல…! குழந்தை கூட இப்படி கேக்குறாங்க…. சூரி வேதனை….!!!

நடிகர் சூரியிடம் நிலம் வாங்கி தருவதாக விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மீது தொடரப்பட்ட பண மோசடி வழக்கில் ரூ. 2.70 கோடி மோசடி செய்தது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே 3 முறை ஆஜரான சூரி, நேற்று 4வது முறையாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜரானார். பின்னர் பேட்டியளித்த அவர்,  கனவில் கூட வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் தான் வருகிறது.

நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன் எனத் தெரிவித்தார். மேலும், வீட்டை விட்டு வெளியே வந்தால் சூட்டிங்கா என்று கேட்ட நிலை மாறி, காவல்நிலையத்திற்கா என குழந்தைகள் கேட்கின்றனர் என்று வேதனைத் தெரிவித்தார்.

Categories

Tech |