தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள பனமரத்துப்பட்டி புதூர் கிராமத்தில் அம்மையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நித்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சந்திர மதியழகன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தூக்கத்திலிருந்து காலை நேரத்தில் கண் விழித்த சந்திர மதியழகன் வீட்டிற்கு வெளியே நடந்து சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் அங்கு சிறுவனை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.