Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வெளியே நின்றுகொண்டிருந்த கார்… உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி… மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

கார் கண்ணாடியை உடைத்து 4 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள குப்புச்சிபாளையத்தில் சோமு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பரமத்தி வேலூர் பகுதியில் வெல்டிங் பட்டறை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது காரில் நகை கடைக்கு 4 பவுன் நகைகளை வாங்கிக் கொண்டு மீண்டும் பட்டறைக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து வேலையை முடித்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக காரின் அருகே வந்துள்ளார். அப்போது காரின் வலதுபுற கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே 4 பவுன் நகைகள் திருடு போய் இருந்துள்ளது. இதுகுறித்து சோமு உடனடியாக பரமத்திவேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |