Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வெளியே போக முடியல… வாட்டிவதைக்கும் வெயில்…. மிகுந்த சிரமத்தில் பொதுமக்கள்…!!

அக்னி நட்சதிரம் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.

தமிழகம் முழுவதும் கோடை காலம் தொடங்கியதால் கடந்த இரு வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கத்தை  தாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை அடுத்து கத்திரி வெயில் எனக்கூறப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதன் விளைவாக திருச்சி மாவட்டத்தில்  வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இதனால் மதியம் 2 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் குளிர்பான கடைகள் மற்றும் இளநீர் கடைகளுக்கு அதிகமாக செல்கின்றனர்.

இந்த வெப்பத்தை குறைக்க மக்கள் அனைவரும் தர்பூசணி மற்றும் முலாம் பழங்களை அதிகமாக வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் மாலை நேரத்தில் திருச்சி நகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் திடீரென குளிர்ந்த காற்று வீச ஆரம்பித்துள்ளது. இதனை அடுத்து வானத்தில் கருமேகங்கள் கூடி மழை பெய்வதற்கான அறிகுறி காணப்பட்டது. ஆனாலும் மழை வரும் என்று எதிர்பார்ப்பில் இருந்த மக்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும் மழை பெய்யாவிட்டாலும் மாலை நேரம் வீசிய குளிர்ந்த காற்று திருச்சி நகர மக்களை ஓரளவு நிம்மதி அடைய செய்தது.

Categories

Tech |