மர்ம நபர்கள் பணம் மற்றும் தங்க நகையை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள ரங்கநாதபுரம் பகுதியில் பாஸ்கரன் என்ற லாரி ஓட்டுநர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பாஸ்கரன் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று வீடு திரும்பியுள்ளார். இதனை அடுத்து பாஸ்கர் தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கபட்டறிந்த 25 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 25 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.இது குறித்து பாஸ்கரன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 25 ஆயிரம் பணம் மற்றும் 25 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.