சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வெங்கம்மா. இவர் கணவரை பிரிந்து தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கம்மா சம்பவத்தன்று வேலைக்கு சென்றிருந்த நிலையில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது 12 வயதுடைய அந்த சிறுமி, தன்னுடைய அண்ணனை தான் உடை மாற்றிக் கொள்ள போவதாக சொல்லி வெளியே போக சொல்லி கதவை அடைத்துள்ளார். உள்ளே ஆனால் வெகு நேரமாகியும் கதவு திறக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அண்ணன், பக்கத்தில் இருந்தவர்கள் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அப்போது மின் விசிறியில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டதில், இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தன்னுடைய மகள் வயதுக்கு வந்ததாகவும் தற்போது மாதவிலக்கு வலியை அவரால் தாங்க இயலாமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.