கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்றுவந்த சசிகலா சற்றுமுன் டிசார்ஜ் செய்யப்பட்டார். அவர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்ததும், அவரின் காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு இருந்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் கட்சி கொடியை சசிகலாவின் காரில் இடம்பெற்றிருக்கிறது என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அதிமுகவின் பொதுச் செயலாளராக அவர் சில காலங்கள் இருந்தார், அதன் பின்னராக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் கட்சியை வழி நடத்திச் செல்கிறார்கள்.
இதனிடையே சசிகலா வெளியே வந்தால் அதிமுகவை உரிமை கோருவதில் நிச்சயமாக சட்ட போராட்டங்களில் இறங்குவார் என்று அவரது வழக்கறிஞர் சொல்லியிருந்தார். அதே போல நமது எம்ஜிஆர் நாளேடுகளிலும் அது சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இந்த தருவாயில் இன்றைய தினம் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் சூழ்நிலையில் அவரது காரில் அதிமுக கொடி இடம்பெற்றிருப்பதை இடம்பெற்று உள்ளது.
சசிகலாவின் சொந்த காரில் அதிமுக கட்சி கொடிகளை பயன்படுத்தபட்டுள்ளதால் சசிகலா சட்ட போராட்டத்திற்கு தயாராகி விட்டார் என்று சொல்லப்படுகின்றது. அவர் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை தெரிவிக்கப் போகிறாரா என்று பார்க்கலாம். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.