தமிழகத்தில் புயல் தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மேலும் வலுவடைந்து தீவிர புயலாக மாறியுள்ளது. அந்தப் புயல் நாளை கரையைக் கடக்க உள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளத.
அதன் காரணமாக 24 மற்றும் 25 ஆம் தேதி வரையில் பெருமழையும், புயலும் இருப்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன், #cyclone nivar” என்று அவர் கூறியுள்ளார்.