Categories
மாநில செய்திகள்

வெளியே வர கூடாது…. மீறினால் 14 நாள் தனிமைக்கு பின் கடும்நடவடிக்கை….. அமைச்சர் எச்சரிக்கை…!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து மக்கள் வெளியே வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. எனவே அதிமுக அரசு மண்டலங்களின் அடிப்படையில் அமைச்சர்களை பணி வாரியாக பிரித்து கொரோனா  தடுப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளது. அதன்படி, அண்ணா நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய மூன்று மண்டலங்களின் தடுப்பு பணியில் உணவுத்துறை அமைச்சரான காமராஜ் நியமிக்கப்பட்டு பொதுப் பணியில் ஈடுபட்டு உள்ளார். இந்நிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் தான் மேற்கொண்ட பணி குறித்து அவர் விரிவாக பேசினார். அதில்,

கரோனா வைரஸ் நோய் சென்னையில் அதிவேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதைத் தவிர தேவை இல்லாமல் வெளியே வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியதாகவும், வெளியே வரும் அவர்கள் கட்டாயம்  முக கவசம் அணிந்து தான் வெளியே வர வேண்டும் எனவும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. அதனை மீறுபவர்கள் மீது அபராதம் என்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,

சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. எனவே கொரோனா அதிக அளவில் பரவியுள்ள கட்டுப்படுத்தப்பட்ட அல்லது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலோ, தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளிலோ இருந்து பொதுமக்கள் அனுமதியின்றி வெளியே வரும் பட்சத்தில் அவர்கள் தனியாக கொரோனாவுக்கென என ஒதுக்கப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தி தங்க வைக்கப் படுவது உடன் 14 நாட்கள்  முடிந்த பின் அவர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Categories

Tech |