குடிசை வீடு தீப்பற்றி எரிந்த விபத்தில் பெண் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்ன வடமலை பாளையத்தில் மாதப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீரங்காயி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அய்யம்மாள் என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமையல் செய்வதற்காக வீட்டிலிருந்த கேஸ் அடுப்பை சீரங்காயி பற்ற வைத்துள்ளார். அதன்பின் அருகில் இருக்கும் தன்னுடைய மகன் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் அடுப்பிலிருந்து பற்றிய தீ குடிசையில் பிடித்து விட்டது. இதனால் குடிசை கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர்.
இதற்கிடையில் தீ விபத்தில் சிக்கிய அய்யம்மாள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். மேலும் இந்த தீ விபத்தில் வீடு முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.