Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“வெளிய தலகாட்ட முடியல”, 100°க்கும் மேல வெளுத்து வாங்குது…. கோவிலில் தரைவிரிப்புகள்…. மதுரை மாவட்டம்….!!

மதுரையில் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கும் மேலாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது கோடைகாலம் தொடங்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் ஆங்காங்கே 100°க்கும் மேலாக உள்ளது. இதனால் வானிலை ஆராய்ச்சியாளர் கூறியதாவது, தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் பொதுமக்கள் உடல் உஷ்ணத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள நீர் அதிகம் அருந்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் சுமார் 100°க்கும் அதிகமாக உள்ளது. இதனால் தல்லாகுளத்திலிருக்கும் பெருமாள் கோவிலில் பொதுமக்கள் சற்று அமர்ந்து இளைப்பாறும் வகையாக தரைவிரிப்புகள் போடப்பட்டிருக்கிறது.

Categories

Tech |