Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

வெளிய போகணும்னு நினைச்சா…. என்ன வேணும்னாலும் பேசுவாங்க… உதயநிதி ஸ்டாலின்

திமுகவின் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கு.க செல்வம் திமுகவில் இருக்கப்பிடிக்க வில்லை என்று கூறி பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். இதையடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் சென்ற அவர் திமுகவில்குடும்ப அரசியல் நடக்கிறது என்றும், என்னை மதிக்கவில்லை என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் திமுக இளைஞரணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார் அதில், திமுகவை விட்டு வெளியேற நினைப்போர் எதுவேண்டுமானாலும் சொல்வார்கள். திமுகவை விட்டு வெளியேறுபவர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை  என்று கூறினார்.

Categories

Tech |