அதிமுக கட்சிக்குள்ளே நடக்கும் உட்கட்சி பூசல்கள் வெடித்து பெரிதாகி தற்போது இபிஎஸ் – ஓபிஎஸ் மாறி மாறி தாக்கி வருகின்றனர். தற்போது இபிஎஸ் பொதுகுழு கூட்டங்களில் தீவிரமாக உள்ள நிலையில், ஓபிஎஸ் பெரிய குண்டை தூக்கிப் போட்டுள்ளார். அதாவது, துணை முதலமைச்சர் பதவியை பிரதமர் மோடி ஏற்கச் சொன்னதால் தான் ஏற்றுக்கொண்டேன். எடப்பாடி பழனிச்சாமி தனது ஆட்சி காலத்தில் எந்த இடத்தில் எல்லாம் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்பட்டார் என்பதை பட்டியல் போட்டு வைத்துள்ளேன்.
இதை பொதுவெளியில் சொன்னால் அவமானகரமாக இருக்கும் என ஓபிஎஸ் கூறியுள்ளார். உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்றும் ஓபிஎஸ் மிரட்டியுள்ளார். ஆளுநரை வெளியேறச் சொல்லும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.