Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வெளிவந்த தேர்தல் முடிவுகள்…. போட்டியிட்ட தாய்-மகன்…. தி.மு.க. அமோக வெற்றி….!!

திமுக சார்பில் போட்டியிட்ட அக்கா-தங்கை மற்றும் அதிமுக சார்பில் தாய்-மகன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் நடந்தது முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி குமாரபாளையம் 4-வது வார்டில் தி.மு.க. சார்பில் புஷ்பா என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து 2-வது வார்டில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணவேணி என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் வெற்றிபெற்ற 2 பேரும் அக்கா-தங்கை ஆவார்கள்.

இதபோல் அதிமுக சார்பில் 29-வது வார்டில் போட்டியிட்ட தனலட்சுமியும், 30-வது வார்டில் பாலசுப்பிரமணியனும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் வெற்றி பெற்ற இருவரம் தாய்-மகன் ஆவர்.

Categories

Tech |