வீட்டிலிருந்து பணிபுரியும் அரசு ஊழியர்கள் வெளி மாநிலங்களுக்கு செல்ல கூடாது என்று தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள காரணத்தினால் தமிழக அரசு இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளும் அமலுக்கு வந்துள்ளது.
இதில் 50 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியலாம் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் வீட்டிலிருந்து பணிபுரியும் அரசு ஊழியர்கள் தேவையில்லாமல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலால் 50 சதவீத அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் வேலை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் அதற்கான கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளது.