கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று (05.11.22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இந்த கனமழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள சாலைகள் மற்றும் வீதிகளில் வெள்ள நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு கடந்த சில தினங்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (05.11.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சிபிஎஸ்சி, ஐசிஎஸ்இ பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது எனவும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..