நெல்லை மாவட்டம் வீரமணிபுரத்தில் நேற்று இரவு பெய்த மழையில் ஓட்டு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
நெல்லை மாவட்டங்களில் கடந்த இரண்டு தினங்களாக மழை சற்று ஓங்கி இருந்த நிலையில், இன்று அதிகாலை முதல் மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது. இந்த நிலையில் வீரமணிபுரத்தை சேர்ந்த சிவகாமி அம்மாள் என்பவரின் பழைய ஓட்டு வீட்டின் மேற்கூரை மழையால் இடிந்து விழுந்து முற்றிலும் சேதமானது. உறவினர் இல்லத் திருமண விழாவிற்காக சிவகாமி அம்மாள் வீட்டை பூட்டிவிட்டு பேட்டை பகுதிக்கு சென்றதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. பின் இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் துறையினர் சேதமடைந்த வீட்டை ஆய்வு செய்தனர்.