Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. அதிக மகசூல் கிடைக்க வாய்ப்பு…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி முதல் அரை மணி நேரம் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. அதன்பிறகு 3 மணி நேரம் லேசான மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது.

இந்நிலையில் கடலை அறுவடை செய்யும் சூழலில் இருக்கும் விவசாயிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. இதனால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனையடுத்து முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ள தோட்டங்களில் மழை பெய்தால் நல்ல மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |