கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது. இதனால் பாளையங்கோட்டை திருவடி தெருவில் இருக்கும் ஒரு வீடு திடீரென இடிந்து விழுந்தது. அந்த வீட்டில் தற்போது யாரும் குடியிருக்காததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.