கால்வாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் தொட்டிப்பாலம் சாலையின் ஒரு பகுதியில் பட்டணம் என்ற கால்வாய் ஓடுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குருசூபாறை என்ற இடத்தில் கால்வாய் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்பை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் மூட்டைகளை வைத்து சீரமைத்தனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக இந்த பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கால்வாயில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த பொதுப்பணித்துறையினர் கால்வாயில் தண்ணீர் விடுவதை நிறுத்தி உடைப்பை சீரமைப்பதற்காக இந்த பகுதி சாலையை துண்டித்தனர். இதனால் அவழியாக வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கால்வாய் சீரமைப்பு பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.