சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால், பல்வேறு இடங்களில் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை கிண்டி, சைதாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்கின்றனர். வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மாநகராட்சியும் தமிழக அரசும் முறையாக வடிகால்களை தூர்வார வில்லை என்றும், தண்ணீர் தேங்கி இருந்தால் அதனை சரி செய்வதற்கும் அதிகாரிகள் வருவதில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.