வேதாரண்யம் வாய்மேடு பகுதியில் கொட்டி தீர்த்த கன மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வாய்மேடு, வேதாரண்யம் பகுதியில் கனமழை இரண்டாவது நாளாக பெய்தது. இதனால் வெப்பம் தணிந்தது வேதாரண்யம் அருகே உள்ள வாய்மேடு, தகடூர், மருதூர், தாணிக்கோட்டகம், ஆயக்காரன்புலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. இப்பகுதியில் கடும் வெயில் கடந்த 15 நாட்களாக வெளுத்து வாங்கியது.
இந்நிலையில் திடீரென பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் கடலை, எண்ணெய், உளுந்து, தென்னை, முந்திரி, மா ஆகியவற்றை சாகுபடி செய்த விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல தோப்புத்துறை, அகஸ்தியன்பள்ளி, நெய்விளக்கு, கருப்பம்புலம் ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.