சிவகங்கையில் கோடை வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் மழையினால் குளுமையான சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த 10 நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் வெயில் வெளுத்து வாங்கி வந்தது. இது தவிர அனல்காற்று பல்வேறு இடங்களில் பகல் நேரத்தில் வீசியதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் இதனால் வெளியே வருவதை தவிர்த்து வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர் நேற்று முன்தினம் மிதமான வெயில் வழக்கம்போல் அடித்தது.
இதையடுத்து திடீரென மதியம் 2 மணிக்கு வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் திடீரென பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. கோடை வெயிலை தணிக்கும் வகையில் பலத்த மழை பெய்ததால் அப்பகுதியில் உள்ள மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.