Categories
மாநில செய்திகள்

வெளுத்து வாங்கும் மழை!… ஒகேனக்கல் ஆற்றில் பொதுமக்களுக்கு தடை…. வெளியான உத்தரவு…..!!!!

ஒகேனக்கல் அருவியானது தமிழகத்தின் காவிரி ஆற்றில் அமைந்து இருக்கிறது. இது தர்மபுரியிலிருந்து 46 கிலோ மீட்டர் தொலைவிலும், பெங்களூரிலிருந்து 180 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்து உள்ளது. இங்கு உள்ள ஐந்து அருவி, சினி அருவி, மெயின் அருவி போன்றவற்றில் தண்ணீர் பாய்ந்துஓடும் காலங்களில் பரிசல்களில் சுற்றுலா பயணிகள் பயணம் மேற்கொள்வர். இந்நிலையில் கேரள மாநிலத்தின் சிலபகுதிகள் மற்றும் கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளில் காவிரி ஆற்றிற்கான நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் கர்நாடகா மாநிலத்திலுள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது. அதன்படி காலை 6.00 மணி நிலவரப்படி 28,000 கனஅடியாக அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளுக்கு பொதுமக்கள் போக வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒகேனக்கல் ஆற்றில் பரிசல்சவாரிக்கும், பொதுமக்கள் குளிக்கவும் மாவட்ட நிர்வாகமானது தடைவிதித்து இருக்கிறது. இன்று காலை முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரையிலும் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |