Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கும் மழை!… வெள்ளத்தில் சூழ்ந்த வீடுகள், தேயிலை தோட்டங்கள்…. சிரமப்படும் மக்கள்….!!!!

கோவை மாவட்டத்திலுள்ள வால்பாறையில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கிறது. இந்நிலையில் நேற்று வால்பாறை மற்றும் சுற்றுப் புற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த தொடர்மழை காரணமாக நடு மலை, வெள்ளி மலை டனல் ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையில் பரம்பிக் குளம்-ஆழியாறு திட்டத்தின் அடிப்படை அணையாக திகழும் சோலையாறு அணை நிரம்பியது. அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் அளவானது வினாடிக்கு வினாடி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சோலையாறு அணையின் பாதுகாப்புகருதி எப்போது வேண்டுமானாலும், அணை திறக்கப்பட்டு 3 மதகுகள் வழியே உபரிநீர் வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக வருவாய்த் துறை வாயிலாக கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை ஒலிபெருக்கி மூலம் விடுக்கப்பட்டுள்ளது. சோலையாறு அணையிலிருந்து தண்ணீர் தானாக வெளியேறும் சேடல்பாதை வழியே 300 கன அடி தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு வெளியேறி வருகிறது. சேடல் பாதை வழியே வெளியேறும் தண்ணீர் நீர் வீழ்ச்சியாக ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பலத்த மழை காரணமாக வால்பாறை காமராஜர்நகர் பகுதியில் கருப்பசாமி என்பவரின் வீடு சேதமடைந்தது. எனினும் யாருக்கும் எந்த பாதிப்பு ஏற்படவில்லை.

சோலையாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியிலுள்ள உருளிக்கல் எஸ்டேட் தேயிலை தோட்டங்களை தண்ணீர் சூழ்ந்து கொண்டது. இதன் காரணமாக அங்கு தோட்ட தொழிலாளர்கள் பச்சை தேயிலை பறிக்க முடியாக சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதில் உருளிக்கல் எஸ்டேட் பெரியார் நகர் பகுதியிலுள்ள வீடுகளை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொது மக்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் வருவாய் துறை, நகராட்சி நிர்வாகத்தினர், பொதுப்பணித்துறை, போலீஸ்சார், தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சோலையாறு அணைக்கு வினாடிக்கு 5,036 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. 2 மின் நிலையங்கள் வாயிலாக மின் உற்பத்திக்கு பிறகு அணையிலிருந்து 1,678 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது.

Categories

Tech |