Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கும் வெயிலால்… தாகம் தணிக்க வரும் பக்தர்கள்… விற்பனை அமோகம்..!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் திருக்கடையூர் பகுதியில் இளநீர் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு வெளிமாநிலம் மற்றும் தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். திருகடையூர் பகுதியில் வெயிலின் தாக்கம் சற்று அதிக அளவில் உள்ளதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதனால் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாத்து கொள்ள இளநீர், கரும்பு ஜூஸ், ஐஸ் மோர் உள்ளிட்ட குளிர்பானங்களை வாங்கி சாப்பிட்டு தாகத்தை தணித்துக் கொள்கின்றனர். இதனால் வியாபாரிகள் விற்பனைக்காக திருக்கடையூர் பகுதியில் இளநீரை கொண்டுவந்து குவித்துள்ளனர். திருக்கடையூர் வடக்கு வீதி, சன்னதி வீதி, தெற்கு வீதி, மேல மடவிளாகம், கடை தெரு ஆகிய பகுதிகளில் இளநீர் விற்பனை அமோகமாக உள்ளது.

Categories

Tech |