Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வெள்ளக்காடாக மாறிய ஒகேனக்கல்…. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!!!!!

கர்நாடகா கேரளா மாநில நிர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கபினி கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியுள்ளது. இதனால் இந்த இரண்டு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு அதிக அளவில் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, கேரட்டி ராசிமனல், பிலிகுண்டுலு  ஒன்றிய பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கின்றது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அதன்படி நேற்று மாலை 5 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்ததால் ஒகேனக்கல் வெள்ளக்காடாக மாறி உள்ளது. இதனால் ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் மெயின் அருவி, சினி பால்ஸ் போன்ற அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. ஐந்தருவி, மெயின் அருவி தெரியாத அளவிற்கு பாறைகள் மூழ்கியபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையில் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் ஒகேனக்கல்லில் காவிரி கரையோர தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்து இருக்கின்றது. மேலும் ஊட்டமலை நாடார் கொட்டாய்சத்திரம் போன்ற காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய் துறையின் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் போலீசார், தீயணைப்பு படையினர், வருவாய்த்துறையினர் மெயின் அருவிக்கு செல்லும் நுழைவு வாயிலை பூட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனை தொடர்ந்து அவர்கள் காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவும் துணி துவைக்கவும் செல்ல வேண்டாம் என ஒலிபெருக்கிமூலம் எச்சரிக்கை எடுத்து வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர் வளத்தை தமிழக கர்நாடக எல்லையாக பிலிகுண்டுலுவில்  மதிய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். கடந்த மாதம் 15 ஆம் தேதி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |