மும்பை மற்றும் புனேயில் இன்று கனமழை முதல் அதீத கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தெலுங்கானா,ஆந்திரா மற்றும் வட கர்நாடகா ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது.மேலும் உள் கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிராவை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளில் நிலைகொண்டிருந்த இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வட மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. அதனால் மும்பை மற்றும் புனேயில் பெய்து கொண்டிருக்கும் தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகள் அனைத்திலும் வெள்ளம் சூழ்ந்து காட்சியளிக்கிறது. அதனால் இன்று கனமழை முதல் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடலில் சீற்றம் அதிகமாக இருப்பதால் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் எவரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.