Categories
மாநில செய்திகள்

வெள்ளக்காடான சாலைகள்… மழை நீரில் நடந்து சென்று…. ஆய்வு செய்த எடப்பாடி பழனிசாமி!!

சென்னை கேகே நகர் ராஜமன்னார் சாலையில் சூழ்ந்துள்ள வெள்ள நீரை ஆய்வு செய்து வருகிறார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி..

சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து காட்சியளிக்கிறது.. மேலும் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.. வெள்ளநீரை அப்புறப்படுத்தும் முயற்சியில் பல்வேறு நடவடிக்கைகைளை அரசு மேற்கொண்டு வருகிறது..

இந்நிலையில் இன்று மதியம் முதல் சென்னையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு நேரில் சென்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். முதலில் சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதிக்கு நடந்து சென்று மழைநீர் வடிகால் எந்த அளவுக்கு இருக்கிறது என்று  எடப்பாடி கே.பழனிசாமி ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.. மேலும் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.. அவருடன் முன்னாள் மாஜி அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் சென்றனர்..

அதனை தொடர்ந்து தற்போது தென்சென்னை பகுதியான கேகே நகர் ராஜமன்னார் சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் நடந்து சென்று வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.. அவரிடம் அந்தப் பகுதி மக்கள் கூட்டமாக கூடி தங்கள் பாதிப்புகள் குறித்து தெரிவித்து வருகின்றனர்.. மு க ஸ்டாலின் நேற்று காலை முதல் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்த நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் முதல் சென்னையில் பல்வேறு பகுதியில் ஆய்வு செய்து வருகிறார்..

 

Categories

Tech |