Categories
மாநில செய்திகள்

வெள்ளத்தால் சென்னை மக்கள் கடும் அவதி…. முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை உட்பட பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.

சென்னையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் முக. ஸ்டாலின் 2-வது நாளாக இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதில் முதற்கட்டமாக சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரத்தில் மழையால் பாதிப்படைந்த பகுதிகளை முதல்வர் முக. ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பொதுமக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார். மேலும் கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, பால், போர்வை போன்ற நிவாரண பொருட்களை வழங்கினார். அதன் பின்னர் மழை பாதிப்பு நிலவரம் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்வர் முக
ஸ்டாலின் ஆய்வு நடத்தி வருகிறார்.

Categories

Tech |