உத்தரகண்ட் மாநிலம் ராம் நகர் அருகில் தேலா ஆற்றின் வெள்ளத்தில் கார் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அந்த காரில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலியாகினர். இதனிடையில் ஒரு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இந்த விபத்து இன்று அதிகாலை 5 மணியளவில் நடந்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட காரில் இருந்து இதுவரையிலும் 4 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
கடும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், காரில் இருந்து மற்ற உடல்களை மீட்க முடியாமல் மீட்புக்குழுவினர் தத்தளித்து வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறை உதவி ஆய்வாளர் கூறியதாவது “தேலா ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரில் இருந்த 9 பேர் பலியாகினர். தற்போது காரிலிருந்து 4 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 5 பேரின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகக்” அவர் கூறியுள்ளார்.