கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாரதபள்ளி மடத்துவிளை பகுதியில் தங்கமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புஷ்பா(60) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், 2 மகன்களும் இருக்கின்றனர். நேற்று புஷ்பா வீட்டிலிருந்து சற்று தூரத்தில் இருக்கும் தாமிரபரணி ஆற்றுக்கு சென்று துணி துவைத்து குளித்து வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது கரையில் புஷ்பாவின் துணிகள் இருந்தது.
அவரை காணவில்லை. எனவே குளித்துக் கொண்டிருந்தபோது ஆற்று வெள்ளத்தில் புஷ்பா அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் குடும்பத்தினர் தீயணைப்பு வீரர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். மாலை 6 மணியாகியும் அவரை கண்டுபிடிக்க இயலாததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று தீயணைப்பு வீரர்கள் அவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.