Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் சிக்கித் தவித்த 7 குடும்பங்கள்…. தீயணைப்பு துறையினர் மீட்பு….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே வெள்ளத்தில் சிக்கி தவித்த 7 குடும்பங்களை தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள பொய்கை அணை நிரம்பி மறுகால் பாய்ந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் செண்பகராமன்புதூர் பெரிய குளத்திற்கு சென்றடைகிறது. இதையடுத்து நேற்று பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்து கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. அதனால் அருகில் உள்ள தனியார் கல்லூரிகளுக்கு வெள்ளம் புகுந்து பல இடங்களில் சுற்றி இறுதியாக பெரிய குளத்தை அடைகிறது.

மேலும் தனியார் கல்லூரி அருகே தேவேந்திர நகர் குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் 24 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். வெள்ளம் குடியிருப்பை சூழ்ந்ததும், 10 குடும்பத்தினரும் அவருடைய உறவினர் வீடுகளுக்கு சென்று விட்டனர். மீதமுள்ள 7 குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர்.

இதுபற்றி தகவலறிந்த ஆரல்வாய்மொழி பேரூராட்சி செயல் அலுவலர் ஜோஸ்லின் ராஜ், கோட்டாட்சியர் சேது ராமலிங்கம், தாசில்தார் தாஜ் நிஷா, கிராம நிர்வாக அலுவலர் ஹரி நயினார் பிள்ளை போன்றோர் நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு 7 குடும்பங்களை சேர்ந்த 20 பேரை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |