மத்திய பிரதேசம் மாநிலத்தில் கனமழை காரணமாக பல மாநிலங்கள் வெள்ளக்காடாகியுள்ளது. இதனால் பல்லாயிரம் பேர் தங்கள் உடைமைகளை இழந்து உள்ளனர். அதுமட்டுமில்லாமல் லட்சணக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கியது. வெள்ளை நீரில் சொரிந்து கொண்டதால் வீடுகளை விட்டு வெளியேறவும், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை விமானத்தில் சென்று முதல்வர் சிவராஜ் பார்வையிட்டார். உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அப்போது முதல்வர் சிவராஜ் சிங் சவுக்கான் தொலைபேசியில் பேசினார் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுல்லது. அதில், கீழே நின்று இருக்கும் நபரை பார்த்து முதல்வர் கையசைக்கிறார். “நீங்கள் எல்லாம் எனக்கு தெரிகிறீர்கள். ஒன்றும் கவலைப்பட வேண்டாம்” என்று ஆறுதல் கூறினார். அப்போது விமானியிடம் கொஞ்சம் லெஃப்ட், கொஞ்சம் ரைட் என கட்டளைகள் பிறப்பிக்கிறார்.
இந்த வீடியோ மத்திய பிரதேசம் மாநில காங்கிரஸ் கமிட்டி செய்தித்துறை துணைத் தலைவர் நரேந்திர சலுஜா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், இந்த உலகில் ஏராளமான அதிசயங்களை பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படி ஒரு அதிசயத்தை பார்த்தில்லை. வெள்ளத்தில் தவிக்கும் மக்கள் தங்கள் வீட்டுக்கு கூரைகளில் மேல் நின்று கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு விமானத்தில் இருந்தபடியே முதல்வர் கையசைக்கிறார். என்ன இதெல்லாம்? மீட்பு பணிகளை விரைவுப்படுத்துங்கள் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இதற்கிடையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை விரைவாக வழங்க அதிகாரிகளுக்கு முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மக்களை மீட்க தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படைகள் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தேவை ஏற்பட்டால் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதே நேரத்தில் நிவாரண முகாம்களில் புதிய வசதிகளை ஏற்படுத்துங்கள் என்றும் அறிவித்துள்ளார். இதனையடுத்து சேதுமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் வெள்ளம் வடிந்தவுடன் பாதிப்புகள் குறித்து விரிவான கணக்ககெடுப்பு நடத்தப்படும். அதன்படி வீடுகளை இழந்தவர்களுக்கு புதிதாக வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.