உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வெள்ளப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, “பேரிடர்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த கடும் விழிப்புணர்வு அவசியம் ஆகும்.
பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் பயிற்சி, மீட்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு சரியான நோக்கத்துடன் நடத்தப்பட்டால் மட்டுமே பேரிடர்களால் ஏற்படும் சேதங்களின் தாக்கத்தைக் குறைக்க இயலும். அதிலும் குறிப்பாக மாநிலத்தின் மிர்சாபூர் மற்றும் சோன்பத்ரா மாவட்டங்களில் மின்னல் தாக்குதலால் நிகழும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முன்கூட்டியே எச்சரிக்கை முறையை நடைமுறைபடுத்த வேண்டும் எனவும் யோகி ஆதித்யநாத் கூறினார்.