Categories
மாநில செய்திகள்

வெள்ளம் வருது மக்களே… இந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான புரெவி புயல் இலங்கை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென புயல் பின்வாங்கி தற்போது ராமநாதபுரம் அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மையம் கொண்டுள்ளது. இருந்தாலும் புயல் எதிரொலியாக பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்திலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |