நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் தமிழகத்தில் நேற்று நள்ளிரவு முதல் இரவு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையடுத்து புதுச்சேரியிலும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார். மற்ற நாட்களில் கடைகள், அங்காடிகள் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என தெரிவித்துள்ளார்.