தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்தாலும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. இதனால் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் தொடரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பொது இடங்களில் மக்கள் கூடுவது தவிர்ப்பதற்காக வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டிருக்கும் என அறிவித்துள்ளது. ஆனால் இதற்கு பாஜகவினர் கடுமையாக எதிர்ப்பு தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களையும் அனைத்து நாட்களும் திறக்க கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், அனைத்து மதத்தினரும் தங்களுடைய விழாக்களைக் கொண்டட்டும். அதே போல நாங்கள் எங்கள் விழாவை கொண்டாடுகிறோம். அப்படி விழாக்களைக் கொண்டாடும் எங்களை மட்டும் தடுப்பது எப்படி நியாயமாகும்.
இறைவனுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமை வழிபாடு நடத்த அனுமதி இல்லை என்றால் திமுக ஆட்சிக்கு சனி பிடிக்கப் போகிறது. வரும் வெள்ளிக்கிழமை முதல் தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கவேண்டும். வாரம் மூன்று நாள் வழிபாட்டுத்தலங்கள் மூடி இருப்பதை கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.